வவுனியா மரக்கறி சந்தை வியாபாரிகளுக்கு பிசிஆர் பரிசோதனை.

0 72

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமையில் மொத்தவிற்பனை மரக்கறி சந்தை வியாபாரிகளுக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக பல தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டு வருகின்றனர்.

இதன்பிரகாரம் தற்போது வவுனியாவிலும் பல தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

இதனால் வவுனியா வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நூற்றுக்கும் அதிகமான மொத்த மரக்கறி வியாபாரிகளுக்கு இன்றைய தினம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை நேற்றைய தினத்தில் இருந்து பொதுச் சந்தைகள் அனைத்தும் திறக்கப்பட்டு சமூக இடைவெளி யின் கீழ் மொத்த விற்பனைகள் மட்டும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.