மலையக உறவுகள் நோக்கி பயணிக்கும் புலம்பெயர் உறவுகளின் உதவிக்கரம்..

0 188

“கண்ணீரோடு ஏங்கும் எம்மவர்கள் விண்மீன்களோடு விளையாட நாமும் முனைவோம்” என பரததர்சனா வாழ்வாதார உதவி நிறுவனமும் தெரிவித்துள்ளது.

குறித்த நிறுவனத்தின் தலைவர் தீசா இதனை தெரிவித்துள்ளார்.

சுவிஸை தலைமையகமாக கொண்டு இயங்கும் சமூக தொண்டு நிறுவனமான இந்த நிறுவனத்தின் தொண்டர்களுக்கிடையிலான ஆண்டறிக்கை கூட்டம் நேற்று மாலை ஆன்லைன் மூலம் நடை பெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்..

இலங்கையில் யுத்தம் மௌனிப்பிக்கப்பட்டு 11 வருடங்களை கடந்துள்ள போதும் தமிழ் மக்கள் மத்தியில் கல்வி, பொருளாதாரம், வாழ்வாதாரம் போன்ற அடிப்படை விடயங்கள் அபிவிருத்தி இன்றியே காணப்படுகின்றது.

இந்த நிலையில் வடகிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வாழும் வறிய மக்களின் நலன் மேம்பாட்டிற்க்காக புலம்பெயர் உறவுகளின் உதவிகளோடு பரததர்சனா வாழ்வாதார உதவி நிறுவனம் ஒழுங்கமைத்து வழங்கி வருகின்றது.

இதற்கமைய பிறந்திருக்கும் புதுவருடத்தில் இருந்து மலையக பகுதிகளில் வாழும் எமது இரத்த சொந்தங்களிடமும் இந்த பணிகளை முன்னெடுக்கவுள்ளோம்.

புலம்பெயர் தமிழ் உறவுகள் தாயகத்தில் வாழும் உறவுகளின் துன்பத்தை பகிர்ந்து எம் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தேவை அறிந்து உதவி வருகின்றனர்.

எமது நிறுவனத்தின் நேர்த்தியான சேவையை மதித்து உதவி வரும் உறவுகளுக்கு எமது நிறுவனம் சார்பாக நன்றிகளையும் புதுவருட வாத்துக்களையும் தெரிவிப்பதோடு இந்த பணி சிறப்பாக தொடர இறைவனை பிராத்திக்கிறேன் எனவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் தொண்டர் ஒருவரால் இந்த 2020 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில் பரததர்சனா வாழ்வாதார உதவி நிறுவனம் அம்பாறை, மட்டக்களப்பு, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் தமது பணிகளை மேற்கொண்டுள்ளது.

இதன்படி 10 பொதுக்கிணறுகள், 605 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள், 650 குடும்பங்களுக்கான அத்தியாவசிய உடைகள், 36 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள், 5 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் மற்றும் 14 மாணவர்களுக்கான மாதாந்த நிதியுதவியும் வழங்கப்பட்டது.

அத்துடன் 43 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளும் தலா 2 குடும்பங்களுக்கு மலசலகூட வசதி மற்றும் மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டதுடன் 110 குடும்பங்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும் சமய, கலாசார, நினைவு தினங்களின் போது 2180 பேருக்கு பரததர்சனா வாழ்வாதார நிறுவனம் மதிய உணவு வழங்கி வைத்துள்ளதாகவும் அறிக்கையில் வாசிக்கப்பட்டது.

இதனை அடுத்தது பிறந்துள்ள புது வருடத்தில் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள உதவிகள் குறித்து தொண்டர்களுக்கிடையில் ஆலோசிக்கப்பட்டதுடன் கூட்டம் நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது.
BLO-Project –

Leave A Reply

Your email address will not be published.