ஒஸ்ரியா நிறுவனத்தின் அனுசரணையில் மன்னாரில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்வு!!
மன்னாரில் கொரோனா கிருமி தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் நடைமுறை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று நேற்று (31) நடைபெற்றது.
மன்னார் சுகாதாரத் திணைக்களம் மற்றும் பொலிஸ் நிலையம் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்விற்கு மன்னார் ஒஸ்ரியா நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தது.
சர்வமத தலைவர்களின் ஆசியுரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி, கொரோனா விழிப்புணர்வு பதாதைகளை தாங்கிய முச்சக்கர வண்டிகள் பவனியாகவர கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் பேரூந்து நிலையத்தை வந்தடைந்த கொரோனா வழிப்புணர்வு வாகன பவனியை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஸ்ரான்லி டி மெல் பார்வையிட்டதன் பின்னர் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து மன்னார் பேரூந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தொற்றிலிருந்து தம்மை பாதுகாப்பது தொர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் வினியோகிக்கப்பட்டிருந்தது.
நிகழ்வில் சுகாதார கல்வி பரிசோதகர் திருமதி. சிவகுமாரி, மன்னார் பிரதேச சபை தலைவர் எஸ்.எச்.எம். மிலாகிர், மதகுருமார், ஒஸ்ரியா நிறுவனத்தின் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.