காலத்தின் தேவை கருதி அனைவரும் செயற்பட வேண்டும் -மயூரக்குருக்கள்!
தற்போதைய சூழ்நிலை அனைவரும் அறிந்ததே. எனவே ஒவ்வொருவரும் தம்மைப்பாதுகாக்க வேண்டிய கடமையில் உள்ளோம்.
மதகுருமார்களும் இதற்கு விதிவிலக்கல்ல என்று சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்…
தற்போது வவுனியாவில் மிகவேகமாக பரவிவரம் கொரோணா காரணமாக ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே பாதுகாக்கின்ற கடப்பாடு இருக்கின்றது.
எனவே ஆலயச் சூழலில் பூஜைகள் தவிர்க்கப்பட முடியாதவை அவை இடையூறு இன்றி நடக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
எனவே ஆலயம் சார்ந்த பரிபாலகர்கள் ஆலய பூஜைகள் சிறப்பாக தடையின்றி இடம்பெற வேண்டுமேயானால் ஆலயத்திற்கு வருகின்ற அடியவர்களை கட்டுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
வருகின்ற யாரோ ஒருவர் மூலம் பூஜை பண்ணுகின்ற குருவிற்கு தொற்று ஏற்பட்டால்
ஆலயம் பூட்ட வேண்டிய நிலை வரும்.
எனவே தற்போதய அபாயகரமான சூழலைக் கருத்தில் கொண்டு உடனடியாக அடியவர்கள் ஆலயத்திற்கு பிரவேசித்தலை தடுத்துக் கொள்ளுங்கள்.
அனைவருக்கும் இது பொதுவான பிரச்சினைகளாக உள்ளது. எனவே காலத்தின் தேவை கருதி அனைவரும் செயற்பட வேண்டிய தேவையாகும்.
இது தொடர்பாக மதஸ்தலங்கள் மற்றும் பரிபாலகர்கள் குருமார்கள் அனைவரும் தங்கள் பாதுகாப்பினையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமே.
இந்த நடைமுறைகளை உடனடியாக அமுலுக்கு கொண்டு வந்து அனைவரது பாதுகாப்பினையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என கூறப்பட்டுள்ளது.