இரு வாரங்களுக்கு முடங்குகிறது இலங்கை நாடாளுமன்றம்..
நாடாளுமன்றத்தில் பணியாற்றிய 5 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற உணவுப் பிரிவு, போக்குவரத்து பிரிவு, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அலுவலம் உள்ளிட்ட அலுவலகங்களில் தலா ஒருவருக்கும் பொலிஸார் இருவருக்குமே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்றில் உள்ள சபாநாயகரின் அலுவலகம் மற்றும் உணவகம் என்பன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கமைய நாடாளுமன்றத்தில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து 17 ஆக காணப்படுகின்றது.
இந்த நிலையில் நாடாளுமன்றை இரண்டு வாரங்களுக்கு மூடி தொற்று நீக்குமாறு பணியாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.