சட்டவிரோத மணல் அகழ்வால் சேதமாகும் வீதிகள்!! கிராம மக்கள் குற்றச்சாட்டு!!
வவுனியாவில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடுவோரால் தங்கள் கிராமத்து வீதிகள் போக்குவரத்து செய்ய முடியாத அளவுக்கு சேதமாக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வவுனியா வெண்கலச் செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆண்டியாபுளியங்குளம் மீடியாபாம் கீராமத்தின் வீதிகளினூடாக பயணிக்கும் சட்டவிரோத மண் கடத்தல்காரர்களின் டிப்பர் வாகனங்கள் கிராமத்தின் வீதிகளை சேதப்படுதி வருகின்றது.
மீடியாபாம் இந்திய வீட்டுத்திட்ட கிராமத்தில், பெண்களை தலைமைத்துவமாகவும், வலுவிழந்தோர் உட்பட அறுபது குடும்பங்கள் பாவிக்கும் இவ்வீதியால், அனுமதியற்ற சட்டவிரோத மண் கடத்தல்காரர்களின் வாகனங்கள் பிரதான வீதிகளை தவிர்த்து இக்கிராமத்தினூடாக பயணிப்பதால் மக்கள் பாவிக்க முடியாதவகையில் சேதமாகியுள்ளதாக சுட்டிக்காட்டினர்.
தொடர்ந்து இவ்வீதி தொடர்பாக கருத்து தெரிவித்த மீடியாபாம் கிரம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர்.
எமது கிராமத்தின் வீதியின் சீர்கேடு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தபோதும் நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை.
மீள்குடியேற்றம் செய்யப்பட்ட எமது கிராமம் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களை கொண்டதுடன், எந்தவிதமான அபிவிருத்திகளையும் காணாது தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றமையானது எமக்கு கவலையளிக்கின்றது என தெரிவித்தார்.