ஐ.நா தீர்மானம் – இலங்கையில் தீவிரமடையும் கறுப்பு பட்டியல் விவகாரம்.

0 238

கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்வர்களுடன் தொடர்புகளைப் பேணுபவர்கள் சிறைப்பிடிக்கப்படுவார்கள் என அரசாங்கம் அறிவிததுளட்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

தடை செய்யப்பட்ட தனி நபர்கள் மற்றும் அமைப்புக்களின் பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை அரசு வெளியிட்டிருந்தது.

அதன்படி பட்டியலில் தடை செய்யப்பட்ட நபர்களாக அறிவிக்கப்பட்ட சிலர் தற்போதும் இலங்கையில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவர்களை இலங்கை அரசு நாடு கடத்துமா என ஊடகவியலாளர்களால் அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதன்போதே அரசு வெளியிட்ட தடைப் பட்டியலில் உள்ளவர்கள் இலங்கையில் இருந்தால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

அவர்களுடன் தொடர்புகளைப் பேணுவோரும் சிறையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என அவர் பதிலளித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றபட்ட பின்னரே இரசாங்கம் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.