பறிபோனது ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி – வெளியான அறிவிப்பு!

0 255

ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக காணப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்துள்ளார்.

இன்று கூடியுள்ள நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

அத்தடன் நாடாமன்றத் தேர்தல் சட்டத்தின்படி ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதை இரத்து செய்வதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தேர்தல் ஆணையத்தின் தலைவருக்கு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதன்படி, அரசியலமைப்பின் பிரிவு 66 (d) யின்படி, கம்பஹா தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான ஆசனம் வெற்றிடமாக உள்ளதாகவும் அறிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் 4 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து கடந்த ஜனவரி 12 ஆம் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதனையடுத்து, தனது நாடாளுமன்ற ஆசனத்தை இரத்து செய்வதைத் தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கக் கோரி ரஞ்சன் ராமநாயக்க சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

எனினும் குறித்த மனுவை கடந்த 5ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையிலேயே ரஞ்சன் ராமநாயக்கவின் உறுப்புரிமை பறிக்கப்பட்டு ஆசன வெற்றிடம் ககாணப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.