தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்ளும் புடின்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு நெருக்கமானவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், புடின் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் வைரஸ் உருமாற்றம் அடைந்து வீரியம் இழக்காமல் உள்ளது. கீழ்மட்ட மக்கள் முதல் நாட்டின் ஜனாதிபதி வரை யாராக இருந்தாலும் அச்சம் கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
அந்த வகையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு நெருக்கமானவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால புடின் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்ள இருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவில் 71 இலட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1.9 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.