பணத்துக்கு பதிலாக மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி!

0 313

ஆந்திராவில் 9-12-ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசு மாணவ, மாணவிகளின் தாயாருக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிற ரூ.14 ஆயிரம் உதவித்தொகைக்கு பதிலாக இலவச மடிக்கணினி (லேப்டாப்) வழங்கப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

இதற்காக 5,42,365 அடிப்படை பிரிவு மடிக்கணினிகளும், பாலிடெக்னிக், தொழில்முறை பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பயிலும் மாணவா்களுக்காக நவீன திறன் கொண்ட 19,853 மடிக்கணிகளும் வாங்கப்படும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்த மொத்த மடிக்கணினி கொள்முதலுக்காக ரூ.100 கோடிக்கும் அதிகமாக செலிவிடப்படும் என்றும் இதற்கான ஒப்பந்தப்புள்ளி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்த உயா்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையத்தை மாநில அரசு அமைத்துள்ளது.

அடுத்த கல்வி ஆண்டில் 5.42 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் அரசின் நிதி உதவி திட்டத்துக்கு பதிலாக, இலவச மடிக்கணினி திட்டம் மூலம் பயனடைவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.