காசல்ரீ வீதி கார்ப்பட் இடும் பணி ஆரம்பம்
நோட்டன் ஹட்டன் பிரதான வீதியின் காசல்ரீ தொடக்கம் வனராஜா சந்தி வரையான வீதி கார்ப்பட் இடும் பணி இன்று (16) ஆரம்பமாகியது.
மகநெகும வேலைத்திட்டத்தின் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும். ஒரு இலட்சம் கார்ப்பட் வீதி அமைத்தல் வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குட்பட்ட காசல்ரீ தொடக்கம் வனராஜா சந்தி வரையான 05 கிலோ மீட்டர் தூரம் கார்ப்பட் இடப்படுகின்றது.
நெடுஞ்சாலைகளை அபிவிருத்தி அமைச்சினூடாக முன்னெடுக்கும் இத்திட்டமானது நோர்வூட் வீதி அபிவிருத்தி சபையின் மேற்பார்வையில் 82 மில்லியன் நிதியோதுக்கீட்டில் இடம்பெறுகின்றது.
குறித்த வீதி கார்ப்பட் இடும் பணிகள் நிறைவு பெறும் வரையில் குறித்த வீதி காலை 08 மணி முதல் மாலை 05 மணி வரை மூடப்பட்டிருக்கும் எனவும் பிரயாணம் செய்வோர் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் வீதி அபிவிருத்தி சபை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
மேலும் கார்ப்பட் இடும் ஆரம்ப கட்ட பணியினை நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் எம்.இராமச்சந்தின் நேரில் சென்று பார்வையிட்டார்.