இலங்கையில் 50 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றம்
இலங்கையின் சனத்தொகையில் 50 சதவீதமானவர்களுக்கு நேற்று (17) மாலை வரையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் ஏற்றப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதன்படி, 8,973,670 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசியும், 949,105 பேருக்கு அஸ்ட்ரா செனெகா தடுப்பூசியும், 243,685 பேருக்கு மொடர்னா தடுப்பூசியும், 243,685 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியும், 43,453 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியும் ஏற்றப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைய 10,968,195 பேருக்கு இதுவரையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் ஏற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.