மேலும் ஒரு தொகை உலர்ந்த மஞ்சளுடன் 2 சந்தேகநபர்கள் கைது
நீர்கொழும்பு மா ஓயா நீரேந்துப் பகுதியில் நேற்றயை தினம் (16) முன்னெடுக்கப்பட்ட விஷேட சோதனை நடவடிக்கையின் போது, நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பாரியளவிலான (1,162 கிலோ கிராமிற்கும் அதிகம்) உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
இதன்போது கடத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு படகுகள் சகிதம் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை கொவிட்-19 பரவலை தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இடம்பெற்றது.
இந்த நடவடிக்கையின்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், நீர்கொழும்பில் வசிப்பிடமாக கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் சகிதம் சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க, சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.