பிரிட்டன் கொவிட் சிவப்பு பட்டியல்: இலங்கை அடங்களாக 8 நாடுகள் நீக்கம்
பிரித்தானிய அரசாங்கம் இலங்கை அடங்களாக எட்டு நாடுகளை அதன் கொவிட் சிவப்பு அறிவித்தல் பட்டியலில் இருந்து நீக்க உள்ளது.
லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இதுதொடர்பாக குறிப்பிடுகையில் செப்டெம்பர் மாதம் 22 அம் திகதி முதல் இது நடை முறைக்குவரும் என சுட்டிக்காட்டியுள்ளது.
துர்க்கி , மாலை தீவு, எகிப்து, பாகிஸ்தான் , ஓமான், பங்களாதேஷ், கென்யா ஆகிய நாடுகளும் இதில் அடங்கும் என அந்நாட்டு போக்குவரத்து செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் இலங்கையில் இருந்து பிரித்தானியா செல்பவர்கள் முழுமையாககொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டிருந்தால் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்வது அல்லது தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படமாட்டார்கள்.
இலங்கை உட்பட 8 நாடுகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.