23 கோடியைக் கடந்தது உலக கொரோனா பாதிப்பு

0 135

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 23 கோடியைக் கடந்தது.

கடந்த 48 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 684,341 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது இதை அடுத்து, சா்வதேச அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 23 கோடியைத் தாண்டியுள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 230,870,389 போ் அந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 43,404,877 பேருக்கு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 699,748 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். 32,947,854 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா். 9,757,275 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் 33,562,034 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 446,080 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா்.

உலக அளவில் 3 ஆவதாக பிரேஸிலில் 21,283,567 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 592,357 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

இதுதவிர, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், துருக்கி, ஆா்ஜென்டீனா, கொலம்பியா, ஸ்பெயின், இத்தாலி, ஈரான், ஜொ்மனி, இந்தோனேசியா, போலந்து உள்ளிட்ட 35 நாடுகளில் தலா 10 இலட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 4,732,705 போ் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனா் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.