பசில் மற்றும் ரவூப் ஹக்கீமுக்கு புதிய பதவி

0 152

தேர்தல் முறையில் சீர்திருத்தங்களுக்கான நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஸ மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் தேர்தல் மற்றும் தேர்தல் அமைப்பு விதிகளில் மாற்றங்கள் மற்றும் தேவையான திருத்தங்களைச் செய்ய இவர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

இக் குழுவிற்கு அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமை வகிக்கிறார். இவர்களின் இணைவோடு உறுப்பினர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரிக்கும் என்று நாடாளுமன்ற உரையில் சபாநாயகர் தெரிவித்திருந்தார்.

இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நிமல் சிறிபால டி சில்வா, ஜி.எல். பீரிஸ், பவித்ராதேவி வன்னியாராச்சி, டக்ளஸ் தேவானந்தா, விமல் வீரவன்ச, எம்.எம். அலி சப்ரி, ஜீவன் தொண்டமான், அனுரா திசாநாயக்க, கபீர் ஹாசிம், ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், எம். சுமந்திரன், மதுர விதானகே மற்றும் சாகர காரியவசம் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.