இல்லத்தரசிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – எகிறியது விலைகள்
பால் மா, கோதுமை மாவு, சிமெந்து மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் கூடிய வாழ்க்கைச் செலவுக் குழு அனுமதி அளித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
எனினும், அமைச்சரவையின் அனுமதிக்கு உட்பட்டு இது செயல்படுத்தப்படும். மேலும், அரிசி மற்றும் குழந்தை பால் மாவின் விலையை உயர்த்த வேண்டாம் என்று வாழ்க்கைச் செலவுக் குழு முடிவு செய்துள்ளது.
இதன்படி இறக்குமதி செய்யப்பட்ட பால்மா கிலோவுக்கு ரூ200, கோதுமை மாவுக்கு ரூ10 மற்றும் சிமெந்து மூடைக்கு ரூ50 அதிகரிக்க குழு பரிந்துரைத்துள்ளது. எரிவாயு விலையை ரூ550 ஆக உயர்த்த வேண்டும் என்று வாழ்க்கைச் செலவு குழு பரிந்துரைத்துள்ளது.