ஆப்கானிஸ்தானின் அங்கீகாரம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்

0 208

தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை சர்வதேச சமூகம் ஆதரிக்க வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்,

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக அந்த நாட்டு அரசாங்கத்துடன் சண்டையிட்டு வந்த தலிபான்கள், அமெரிக்க படைகள் அங்கிருந்து வெளியேறியதை தொடர்ந்து கடந்த மாதம் 15 ஆம் திகதி நாட்டை முழுமையாக கைப்பற்றினர்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான நெருக்கடியை தடுக்க தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கு சர்வதேச சமூகம் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

ஆப்கானிஸ்தானை, தற்போது புறக்கணித்தால் அது அந்த நாட்டு மக்களுக்கு பாதகமாக அமையும். ஐக்கிய நாடுகள் அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தான் மக்கள் ஏற்கனவே பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர்.

அடுத்த ஆண்டுக்குள் ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட 90 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் செல்வார்கள். எனவே ஒரு மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடி முன்னால் உள்ளது.

இது ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளுக்கு மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே சர்வதேச சமூகம் தலீபான்களின் அரசாங்கத்தை சர்வதேசம் ஆதரிக்க வேண்டும் என்று இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.