டொலர் பற்றாக்குறையால் நாட்டின் இறக்குமதி,ஏற்றுமதி துறைகள் பாதிப்பு – வரவு செலவு திட்டத்தில் பதில் இல்லை
நாடு தற்போது எதிர்நோக்கும் டொலர் பிரச்சினைக்கு இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் தெளிவான வேலைத்திட்டங்களுடன் கூடிய தீர்வு கிடைக்கவில்லை என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை சில துறைகளுக்கு ஊக்குவிப்புகளை வழங்குவதன் மூலம் மாத்திரம் ஏற்றுமதி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கை பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு துறைகளுக்கும் சலுகைகளை வழங்குவதற்கு பதிலாக நிரந்தர வேலைத்திட்டத்தின் அத்தியவசியம் தற்போது நாட்டில் உள்ளது.
அத்துடன் ஏற்றுமதி துறையின் முன்னேற்றத்திற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வரவு செலவுத்திட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை எனவும் பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சிறிலங்காவில் காணப்படும் டொலர் பற்றாக்குறை காரணமாக நாட்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி துறைகள் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றன.