புலம்பெயர்ந்தோருக்காக ஆயிரக்கணக்கான பவுண்டுகள் செலவில் பீட்ஸா!
புலம்பெயர்ந்தோரை பிரித்தானியாவுக்குள் வரவிடாமல் தடுப்பதற்காக இதுவரை செலவு செய்துவந்த பிரித்தானிய உள்துறை அலுவலகம், ஆயிரக்கணக்கான பவுண்டுகள் செலவில் புலம்பெயர்ந்தோருக்கு பீட்ஸா மற்றும் கபாப் விநியோகித்த ஒரு ஆச்சரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று முன்தினம், சிறுபடகுகளில் அபாயகரமான வகையில் 1,185 புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவை அடைந்தனர். அப்படி பிரித்தானியா வந்த புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் 3,000 சிக்கன் கபாப், நூற்றுக்கணக்கான பீட்ஸாக்கள், சோறு முதலான உணவுப்பொருட்களை வழங்கியுள்ளனர்.
அதற்காக பல ஆயிரம் பவுண்டுகளை பிரித்தானிய உள்துறை அலுவலகம் செலவிட்டுள்ளது. இந்த புலம்பெயர்ந்தோருக்கு உணவு தயார் செய்வதற்காக ஹொட்டல் ஊழியர்கள் காலை முதல் மாலை வரை பரபரப்பாக இயங்கி வந்தார்கள்.
இதற்கிடையில், பிரித்தானிய எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களும், பிரான்ஸ் அதிகாரிகளும் மணிக்கணக்கில் செலவிட்டு புலம்பெயர்ந்தோர் படகுகளைக் கையாளும் பணியில் ஈடுபட்டுவந்த நிலையிலும், மூன்று புலம்பெயர்ந்தோர் மாயமாகினர். அவர்கள் கடலில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.