இலங்கை அரசாங்கம் சீனாவை சார்ந்திருக்க காரணம் என்ன? பேராசிரியர் கலாநிதி கீதபொன்கலன் கருத்து

0 287

இலங்கையின் வெளிவிவகார கொள்கையும், பொதுவான கொள்கை நிலைப்பாடும் அது நகர்ந்து செல்லும் போக்கும் சீனா சார்ந்துள்ளது என்பதில் எந்த சந்தேகமுமில்லையென அமெரிக்க பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அல்லது அதனை கட்டியெழுப்புதல் என்ற நோக்கில் பார்க்கும் போது சீனாவைவிட இலங்கைக்கு நிதி கடனாக வழங்கக்கூடிய வேறு நிறுவனங்கள் காணப்படவில்லை.

சீனா, இலங்கைக்கு நிதி வழங்கும் போது அதனை ஜனநாயகம், இனப்பிரச்சினை போன்ற உள்ளுர் பிரச்சினைகளுடன் தொடர்புபடுத்துவதில்லை. இது இலங்கைக்கு ஒரு இலகுவான விடயமாகுமென அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிடமிருந்து வரக்கூடிய அழுத்தங்கள் தொடர்பில் அரசாங்கம் புரிந்துவைத்திருப்பதனால் சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையில் ஒரு சமத்துவத்தை பேணும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக பேராசிரியர் கலாநிதி கீதபொன்கலன் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.