காக்கையன் குளம் பகுதியில் நாசகர செயல்கள்.. திலீபனிடம் வேண்டுகோள் விடுக்கும் கல்மடு கிராம மக்கள்..
வவுனியா கல்மடு 218B கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு பகுதியில் இருந்து மேச்சலுக்கு செல்லும் மாடுகள் அடித்தும் வெட்டியும் துன்புறுத்தப்படுவதாக கிராம வாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் சுய தொழிலாளிலான மாடு வளர்ப்பு மற்றம் பால் உற்பத்தியினை பெருவாரியாக கொண்ட கிராமங்களில் கல்மடு கிராமமும் ஒன்றாகும்.
இப்பகுதியில் மேச்சல் நிலம் இல்லாத காரணத்தினால் காலம் காலமாக இவர்களின் மாடுகள் அயற்கிராமமான பூம்புகார், காக்கையன் குளம் மற்றும் மதீனா நகர் போன்ற பகுதிகளுக்கு மேச்சலுக்காக சென்று வருகின்றன..
இந்த நிலையில் மன்னார் மடு பிரதேச சபைக்கு உட்பட்ட காக்கையன் குளம் மற்றும் மதீனா நகர் கிராமங்களுக்கு பகல் வேளையில் மேச்சலுக்கு செல்லும் மாடுகள் தொடர்ச்சியாக தாக்கப்பட்டு வருவதாக மாடு வளர்ப்பாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் பால் குடிக்கும் கன்று குட்டிகளை கூட சில விசமிகள் கால்களை வெட்டி துண்டாக்கும் பரிதாபமான ஈனச் செயல்களில் ஈடுபடுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
எனவே இந்த விடயம் குறித்து கல்மடு கிராம சேவகர் மற்றும் காக்கையன்குளம் பள்ளி நிர்வாகம் உள்ளிடட சம்மந்தப்பட்ட தரப்பினர் உடனடி தீர்வினை பெற்றுத்தர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்..
மேலும் எமது கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட பகுதி மாடுகளை மேய்ப்பதற்கு மேச்சல்தரை ஒன்றினை அமைத்து தருமாறும் கல்மடு பகுதி மக்கள் மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.