தாயகத்தில் இருந்து முதல் முறையாக சர்வதேச சந்தைக்கு மட்பாண்டங்கள் ஏற்றுமதி..
தாயகத்தை பொறுத்த வரையில் இயற்கை கனிம வளங்களுடன்; தொடர்புபட்ட கிராமிய சிறு கைத்தொழில் வருமானங்களின் மூலமாகவே பெரும்பாலான குடும்பங்கள் வாழ்கை நடத்தி வருகின்றனர்.எனினும் உற்பத்தியாளர்களால் தமது உற்பத்தி பொhருட்களை உள்ளூர் மட்டத்ததில் குறைந்த அளவிலான பணத்திற்கே சந்தைப்படுத்த முடிகின்றது.
இந்த நிலையில் இவ்வாறான தொழில் முனைவோரை முன்னிலை படுத்தி அவர்களின் உற்பத்தி பொருட்களை கிராம மட்டத்ததில் இருந்து சர்வதேச மட்டத்தில் சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தை மத்தியத்துவம் வகிக்கும் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே இந்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுவிiஷ தலைமையகமாக கொண்ட பரததர்சனா வாழ்வாதார உதவி நிறுவனம் என்ற சமூக தொண்டு நிறுவனம் ஒன்றே இதற்கான ஏற்பாடுகளை அமைத்து கொடுத்துள்ளது.
இதற்மைய சூழல் நேய மற்றும் உள்ளூர் வளங்களை அடிப்படையாகக் கொண்டதுமான குடிசை, சிறிய அளவிலான கைத்தொழில்களை விருத்தி செய்தல் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்புகளும் வழங்கப்படவுள்ளதுடடன்.
கிராமிய கைத்தொழில் துறை மூலம் அடையப்படும் நன்மைகளின் பங்கினை அனைவருக்கும் நியாயமாகவும் தூரநோக்குடனும் பகிர்ந்தளிக்கபடவுள்ளது.
இதன்படி முதல்முறையாக 2021 ம் ஆண்டு தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குறித்த உற்பத்;திப் பொருட்கள் கனடாவுக்;கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக பரததர்சனா வாழ்வாதார உதவி நிறுவனம் எமது செய்திச்Nசுவைக்கு தெரிவித்துள்து.
இதேவேiளை இந்த ஏறற்;பாட்டினை செய்து கொடுத்த பரததர்சனா வாழ்வாதார உதவி நிறுவனத்துக்கு மட்டக்களப்பு மக்கள் தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.