ஒருலட்ச்சம் வேலைவாய்ப்பில் நடந்தது என்ன?..உங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமா நீங்கள் பிரதிநிதிகள்?
2020 ஆம் ஆண்டு தேர்தல்க்களம் நிறைவடைந்துள்ள நிலையில் தொடர்ச்சியாக சூடு பிடித்து வரும் ஒரு விடயமாக ஒரு லட்ச்சம் வேலைவாய்ப்பு இடம்பிடித்துள்ளது.
அதுவும் இந்த விடயம் தற்போது வடகிழக்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வட கிழக்கை பொறுத்தவரையில் மக்களுக்கு காலம் காலமாக அரசியல் பழிவாங்கல்களும் சுயலாப அரசியலுமே எமது மக்கள் பிரதிநிதிகளால் வழங்கப்பட்டு வருகினறது
கடந்தகால துயரங்களையும் வடுக்களையும் கூறிக்கொண்டு ஒரு சிலரும் காலம் காலமாக தமிழ் மக்களுக்கு அரசுடன் சேர்ந்து அநீதிகளை மாத்திரமே இளைத்து விட்டு பழசுகளை மறந்துவிடுங்கள் என்று கூறிக்கொண்டு இன்னொரு பிரிவினரும் வாக்கு கேட்பதை மாத்திரமே தமது தலையாய கடமையை கொண்டுள்ளனர்.
ஆனால் மக்களும் இவர்களின் பொய் முகங்களை நன்கு அறிந்திருந்தும் வேறு வழியில்லாமலே வாக்களிக்கின்றனர்
எப்படித்தான் இருந்தாலும் உங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு நீங்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்பட வேண்டும்.
நீங்கள் வீடு வீடாக சென்று வாக்கு கேட்டுவிட்டு உங்கள் உறவுகளுக்கும் உங்ககுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் வேலைவாய்ப்புக்களை வழங்கியுள்ளீர்கள்.
கிராம மட்டங்களில் கிராம சேவகர்களால் புள்ளி இடப்பட்டே குறித்த வேலைப்புக்களுக்கான ஆட்செர்ப்புக்கள் இடம்பெற்றது. வேலைக்கான அனுமதிக்கடிதங்களும் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் அந்த வேலைவாய்ப்புக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியுட்டுள்ளனர்.
இதற்கான காரணம் என்ன?
ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்திலிருந்து இருந்து தேர்வு செய்யப்பட்ட 13,540 போில் 4230 போின் பெயர்கள் நீக்கப்பட்டு மிகுதி 9310 பேருக்கு மட்டுமே நியமனங்கள் வழங்கப்படவுள்ளது.
இந்த வேலை வாய்ப்புக்கள் வடகிழக்கில், வியாழேந்திரன், திலீபன், அங்கஜன் , டக்ளஸ் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் கைகளுக்கு போனதன் காரணம் என்ன?
ஏழைகளின் வாழ்வாதாரத்தையும் நீங்கள் அரசியல் ஆக்குவது ஏன்?
உங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமா நீங்கள் பிரதிநிதிகள்?
வடகிழக்கு மக்கள் பிரதிநிதிகளே நீங்கள் மக்களுக்காக எப்போது மக்களுக்காக உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்பட போகிறீர்கள், இதற்கான பதில் உங்களிடமிருந்து தான் வரவேண்டும் என்ற உண்மையோடு.
நான் மாறன்…