கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் அதிரடி மாற்றம் : ஆசியாவில் முன்னணி
அக்டோபர் மாதம் 25 ஆம் திகதி நிலவரப்படி, கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையானது (CSE), ஆசியாவிலேயே அமெரிக்க டொலர்களில் 29.65 வீதமான அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) வளர்ச்சியின் மூலம் ஆண்டின் இன்றைய திகதி வரையிலான காலப்பகுதிக்குரிய இரண்டாவது அதியுயர் செயல்திறன் கொண்ட பங்குச் சுட்டெண்ணாக முன்னணியிலுள்ளதாக ப்ளூம்பெர்க் வளைத்தளம் தெரிவித்துள்ளது.
இச்சிறந்த செயற்திறனானது, இலங்கையின் மூலதனச் சந்தையின் மீள்திறனையும் மற்றும் உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அதன் வளர்ச்சியின் சாதகத்தன்மையையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
2024, அக்டோபர் 25 அன்று முடிவடைந்த வாரத்தின் நாளாந்த சராசரி விற்பனை ரூ.3.058 பில்லியனாக உள்ளது. மேலும், CSE கடந்த இரண்டு தொடர்ச்சியான வர்த்தக நாட்களில் (வியாழன் மற்றும் வெள்ளி) தினசரி விற்பனை ரூ.4.7 பில்லியனைக் கடந்ததுள்ளது.
அதே வாரத்தில், அனைத்துப்பங்கு விலைச்சுட்டெண் 12,517.58 புள்ளிகளில் நிறைவடைந்ததுடன், அவ்வாண்டிற்கான அதியுயர் விற்பனை வருவாய்க்கான பதிவிற்கு ஒரேயொரு புள்ளியே குறைந்த நிலையில் சிறந்ததொரு பதிவை மேற்கொண்டிருந்தது. அதேவேளை, முதல் 20 பெரிய மற்றும் அதிக திரவப் பங்குகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் S&P SL20 சுட்டெண்ணானது, வலுவான ஆதாயங்களைப் பதிவுசெய்து, 3,759.30 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
இதனால் CSE முதலீட்டாளர்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான தெரிவொன்றாக விளங்குவதுடன், நேர்மறையான வேகத்தை தக்கவைத்து, மேம்பட்ட முதலீட்டு வாய்ப்புகளுக்கு வழி வகுக்கிறது.