மன்னார் மாவட்டம் தற்போதைய கொரோனா நிலைமை.. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல்

0 502

மன்னார் மாவட்டத்தில் மேல் மாகாணம் மற்றும் ஏனைய மாகாணங்களுக்கு உற்பத்தி பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் அனைத்தும் சுற்றிக்கரிப்புக்கு உட்படுத்தப்படும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தெரிவித்துள்ளார்.

குறித்த வாகனங்கள் முருங்கன் சுற்றிகரிப்பு நிலையத்தில் நிறுத்தப்பட்டு, சுற்றிகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்..

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பான தற்போதைய நிலமை தொடர்பாக ஆராயும் அவசர கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை(24) மாலை 3 மணியளவில் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

 குறித்த கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேசச் செயலாளர்கள்,இராணுவ,பொலிஸ் உயரதிகாரிகள், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் உட்பட அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மேல் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இதன்பொது அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

தற்போது மன்னார் மாவட்டம் கொரோனா தொற்று நோய் முழுமையாக இல்லாத ஒரு மாவட்டமாக காணப்படுவதனை மகிழ்ச்சியுடன் தெறிவித்துக் கொள்ளுகின்றேன்.

சகல துறையினரும் இதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றி உள்ளனர். தொடர்ந்தும் இந்த நிலையை பேணுவதற்காக அனைவரும் முழு முயற்சிகளையும் முன்னெடுக்க வேண்டும் என இந்த கலந்துரையாடலில் தீர்மானித்துள்ளோம்.

மன்னார் மாவட்டத்தில் இருந்து ஏனைய மாவட்டங்களுக்கு உற்பத்தி பொருட்களை கொண்டு செல்வதற்காக மன்னாரில் இருந்து மேல் மாகாணம் மற்றும் ஏனைய மாகாணங்களுக்கு செல்லுகின்ற வாகனங்கள் முருங்கன் சுற்றிகரிப்பு நிலையத்தில் நிறுத்தப்பட்டு,சுற்றிகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வெளி மாவட்டங்களில் இருந்து மன்னாரிற்கு வருவதாக இருந்தாலும், இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்வதாக இருந்தாலும் வாகனங்கள் சுற்றிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது..

மேலும் கிராமங்கள், பிரதேசங்கள், என மாவட்ட ரீதியாக குழுக்கள் அமைக்கப்பட்டு, இதற்கான விழிர்ப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் மாவட்டத்தின் டெங்கு நிலவரம் தொடர்பாகவும் ஆராயப்பட்ட்தாக தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர்,

மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை.

அந்த நிலையினை தொடர்ந்தும் கடைப்பிடிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அலோசனைகளை முன்னெடுத்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பாக சுய தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு என 6 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் வரை நிவாரணமாக வழங்கி உள்ளோம்.

தொடர்ந்தும் சுய தனிமைப்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் அதற்கான கொடுப்பனவையும் வழங்க தயார் நிலையில் இருக்கின்றோம் எனவும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல் மேலும் தெரிவித்தார்..

Leave A Reply

Your email address will not be published.