மன்னார் தேக்கம் அணைக்கட்டினை மேவி சுமார் 10 அடிக்கு மேல் நீர் பாய்கின்றது-மன்னார் அரசாங்க அதிபர் நேரடியாக சென்று ஆராய்வு.

0 47
மன்னாரில் இருந்து பெரியமுறிப்பு,குஞ்சுக்குளம் ஆகிய கிராமங்களுக்கு செல்லும்  தேக்கம் அனைக்கட்டின் ஊடாக கழிவு நீர் கடலுக்குச் செல்லும் பாதையில் சுமார் 10 அடிக்கு மேல் நீர் சென்று கொண்டிருக்கின்றது.
-குறித்த அனைக்கட்டைம ன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் இன்று வியாழக்கிழமை(3) மாலை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.இதன் போது உதவி அரசாங்க அதிபர்,நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் ஆகியோர் சென்றிருந்தனர்.
குறித்த பாதையில் இன்னும் ஒரு அடி அதிகமாகினால் குறித்த வீதி மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 

இதனால் பெரியமுறிப்பு,குஞ்சுக்குளம் போன்ற கிராம மக்கள் குறித்த வீதியை பயண்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

 

இந்த நிலையில் குறித்த வீதியின் நிலை தொடர்பாக ஆராயப்பட்டதோடு, பிரதேசச செயலாளர்கள், அனார்த்த முகாமைத்துவ பணியாளர்கள் , கிராம அலுவலர்கள் ,முப்படையினர் ஆகியோரை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.