இன்று இரவுவரை கடலுக்கு செல்ல வேண்டாம் – மீனவர்களுக்கு எச்சரிக்கை….

0 574

புரவி சூறாவளியானது சக்திமிக்க தாழமுக்கமாக நலிவடைந்துள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

வானிலை அவதான நிலைய அதிகாரி மொஹமட் ஷாலிகின் எமது செய்தித் சேவைக்கு இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்.

புரவி புயலானது தற்போது மன்னாரில் இருந்து மேற்கு வடமேற்க்காக சுமார் 143 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.

மேலும் இந்த சூறாவளி நாட்டை விட்டு நகர்ந்து செல்வதனால் இதன் தாக்கமானது படிப்படியாக குறையக்கூடும் என தெரிவித்தார்.

வடக்கு வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும் அனுராதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 75 மிமீ கும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

இதேவேளை வடக்கு வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் புத்தளம் தொடக்கம் மன்னார், காங்கேசன் துறை, ஊடக முல்லைத்தீவு வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்துக்கு 55 முதல் 65 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இந்த வேகமானது அடிக்கடி மணிக்கு 75 கி.மீ வேகத்தில் அதிகரித்தும் காணப்படுவதுடன் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

எனவே புத்தளம் தொடக்கம் மன்னார், காங்கேசன் துறை, ஊடக முல்லைத்தீவு வரையான கடல் பிராந்தியங்களுக்கு இன்று இரவு வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.