யூடியூப் சேனல் தொடங்குகிறார் நடிகர் விஜய்.
பிரபலங்கள் பலர் தங்களின் பெயரில் ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் கணக்குகளைத் தொடங்குவது போல யூ.டியூப் சேனல்களையும் தொடங்கி நடத்தி வருகின்றனர்.
இதன்படி நடிகர் விஜய் அவர்களும் யூ.டியூப் சேனல் ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கமைய தற்போது உதயமாகவுள்ள நடிகர் விஜயின் யூ டியூப் சேனல்.விஜய் மக்கள் இயக்கம் என்னும் பெயரில் ஆரம்பமாக உள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்படும் இந்த யூடியூப் சேனல் மூலம் இனிவரும் காலங்களில் நடிகர் விஜய் தொடர்பான தகவல்களை அறிய முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.