உரிமைக்காக போராடிய பிரபாகரன் தீவிரவாதி – வவுனியா பெரிய பள்ளிவாசல் முன்பாக இஸ்லாமியர் ஒருவர் போராட்டம்.
வவுனியா பெரிய பள்ளிவாசல் முன்பாக இஸ்லாமியர் ஒருவர் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்..
கோவிட் 19 நோயால் பீடிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை எரிப்பதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசின் இந்த உத்தரவுக்கு முஸ்லிம்கள் மத்தியில் இருந்து பெரும் எதிர்ப்பு நிலவி வருவதுடன் நாடாளுமன்றத்திலும் அவ்வப்போது குரல் எழுப்பப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி நேற்று முன்தினம் உயிரிழந்த இஸ்லாம் மதத்தை சேர்ந்த பச்சிளம் குழந்தை ஒன்று தகனம் செய்யப்பட்டது.
இந்த நிலையிலேயே குறித்த குழந்தை தகனம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர் ஒருவர் வவுனியா பெரிய பள்ளிவாசல் முன்பாக பதாதை ஒன்றினை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன் போது வவுனியா மக்கள் சார்பாகவும் எரிக்கப்பட்ட உறவுகள் சார்பாகவும் குரல்கொடுப்பதாக தெரிவித்த அவர்..
பெரும்பான்மையினரின் இந்த அநியாயத்துக்கு எல்லை இல்லையா?
பச்சிளம் குழந்தைமீது கருணை காட்டாத இவர்கள் வேறு யார்மீது கருணை காட்ட போகிறார்கள்?..
ராஜபக்ச குடும்பத்த்தினர் மோசமானவர்கள் இந்த அரசு உயிரோடு எரிப்பார்கள் எனவும் குற்றம் சுமத்தினார்.
மேலும் தமிழ்,முஸ்லீம் சிங்கள மக்களை கொலை செய்துவிட்டு தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்திய கருணை உங்களுக்கு நண்பன்.
ஆனால் இந்த நாட்டினுடைய உரிமைக்காக போராடிய தலைவர் பிரபாகரனை தீவிரவாதி என்று சொல்கிறீர்கள் அவருக்கு ஒரு நீதி உங்களுக்கு ஒரு நீதியா என அவர் கேள்வி எழுப்பினார்..
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் (காணொளி)