அழிவின் விளிம்பில் உலகம் – அனைத்து நாடுகளையும் அவசரநிலை பிரகடனம் செய்ய ஐ.நா அழைப்பு.
புவி வெப்பமடைதலை தவிர்ப்பதற்காக, அனைத்து நாடுகளும் அவசரநிலையை பிரகடனப்படுத்துமாறு நாட்டு தலைவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது.
சபையின் தலைவர் அன்டோனியோ குடரெஸ் இந்த அழைப்பு விடுத்துள்ளார்.
பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட மெய்நிகர் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் உலகளாவிய சமூகம் தமது செயற்பாட்டை மாற்றாவிட்டால், இந்த நூற்றாண்டில் பேரழிவு ஒன்றை ஏற்படுத்தக்கூடிய வெப்பநிலை அதிகரிப்பை நோக்கி உலகம் செல்லக்கூடும்.
பாரிஸ் மாநாட்டில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உலக வெப்பநிலை அதிகரிப்பை முடிந்தவரை 1.5 டிகிரி செல்சியஸ் ஆகக் கட்டுப்படுத்துவதாக நாடுகள் உறுதியளித்தன.
எனினும் அந்த இலக்கை அடைவதற்கான உறுதிமொழிகள் இதுவரையில் போதுமானதாக காணப்படவில்லை.
எனவே இந்த நிலை நீடிக்குமாயின் இந்த நூற்றாண்டு மூன்று டிகிரி செல்சியஸிற்கும் அதிகமான பேரழிவுகரமான வெப்பநிலை அதிகரிப்பை நோக்கி உலகம் செல்லக்கூடும்.
நாங்கள் அனைவரும் ஒரு வியத்தகு அவசரநிலையை எதிர்கொள்கிறோம் என்பதை எவராலும் இனி மறுக்க முடியாது.
அதனால்தான், இன்று, உலகெங்கிலும் உள்ள அனைத்து தலைவர்களையும் கார்பன் நடுநிலைமை அடையும் வரை தங்கள் நாடுகளில் காலநிலை அவசர நிலையை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
எனவே வளிமண்டலத்தில் பசுமை வாயுக்கள் குறைவடைந்துள்ளதனால் கார்பன் நடுநிலைமையை அடையும் வரை அவசரகால நிலை இருத்தல் வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.