அமெரிக்காவின் போர்க் கப்பல்களை கதிகலங்க வைத்த சீனா..
தென் சீன கடலில் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பல்களை சீன போர்க்கப்பல்கள் விரட்டி நடித்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தென் சீன கடலில் உள்ள தீவு பகுதிகளை சீனா அரசு பல வருடங்களாக உரிமை கோரி வருகின்றது.
இதனிடையே குறித்த தீவுகளை ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற சில நாடுகளும் உரிமை கோராத தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் சீனாவுக்கு எதிராக குறித்த தீவை உரிமைகோரும் ஏனைய நாடுகளுக்கு ஆதரவு அமெரிக்க பக்க பலமாக நின்று ஆதரவு வழங்கி வருகின்றது.
இதனால் அமெரிக்க போர்க்கப்பல்கள் சீனாவை அச்சுறுத்தும் வகையில் அடிக்கடி தென் சீன தீவுப் பகுதிகளில் வட்டமிட்டு போர் பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் சீனாவின் நான்ஷா தீவுக்கு அண்மித்த பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபட்ட அமெரிக்காவின் யு.எஸ்.எஸ் ஜோன் மெக்கெய்ன் என்ற போர்க்கப்பலை சீன போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பியுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும் சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ள இந்த செய்திகளுக்கு அமெரிக்க தரப்பில் இருந்து எந்த பதில்களும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.