இன்டர்நெட் பாவனையாளர்களுக்கு ஒரு நற்செய்தி..
விண்வெளி ஆய்வு நிறுவனமான ஒன்வெப் நிறுவனம் தனது 36 செயற்கைக் கோள்களை, சோயுஸ் விண்கலம் மூலம், கடந்த 18 வெள்ளிக்கிழமை விண்ணில் ஏவியது.
ரஷ்யாவில் உள்ள வோஸ்டாச்னி ஏவுதளத்தில் இருந்து குறித்த செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன.
ஒன்வெப் நிறுவனம் எனப்படும் இந்த நிறுவனம் மொத்தமாக 648 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவுவதற்கு திட்டமிட்டுள்ளது.
இதற்கமைய குறித்த நிறுவனம் ஏற்கனவே அனுப்பிய 74கு செயற்கை கோள்களுடன் சேர்த்து கடந்த வெள்ளிக்கிழமை ஏவப்பட்ட 36 கோள்களுடன் மொத்தமாக 110 செயற்கைக் கோள்களை இதுவரை விண்ணில் ஏவியுள்ளது.
இதற்கமைய கடந்த வாரம் விண்ணில் ஏவப்பட்ட இந்த கோள்கள் தாழ் புவி வட்டப்பாதை (Lower Earth Orbit) செயற்கைக் கோள்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகளுக்கு அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்கும் நோக்கிலேயே தாம் இந்த செயற்கைக் கோள்களை வின்னி ஏவியுள்ள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் தமது சேவையை உலக நாடுகளுக்குத் வழங்க திட்டமிட்டுள்ள தெரிவித்துள்ள ஒன்வெப் நிறுவனம் இந்தியாவுக்கு மாத்திரம் 2022ஆம் ஆண்டு மத்தியில் இருந்து அதிவேக இன்டர்நெட் கிடைக்கலாம் எனவும் கூறியுள்ளது.