ரஜினியின் “அண்ணாத்த” படத்தின் படப்பிடிப்பை இடைநிறுத்தியது சன் பிக்சர்ஸ்..
நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் 168வது படமான “அண்ணாத்த” படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில் படப்பிடிப்பு தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவரவுள்ள இந்த திரைப்படம் படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதனை தொடர்ந்தே இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் தளம் மூலம் அறிவித்துள்ளது.
எனினும் நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்படாத நிலையில் இன்றய தினம் சென்னை திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு தளர்வுக்கு பின் அண்மையில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஆரம்பமானது.
இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஜனவரி மாதத்திற்குள் இந்த படத்தை முழுமையாக முடிக்க வேண்டும் என்பதற்காக இயக்குநர் சிறுத்தை சிவா இந்த படத்தின் படப்பிடிப்பை தீவிரமாக இயக்கி வந்தார்.
இந்த நிலையிலேயே ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்ற 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பதனை தொடர்ந்து படப்பிடிப்புகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த படத்தின் பெயரை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் உத்தியோக பூர்வமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.