கண்ணீரால் நனைந்தது போன உடுத்துறை சுனாமி நினைவாலயம்

0 88

யாழ் வடமராட்சிக் கிழக்கு உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை 9:05 மணிக்கு தேசிய கொடி மற்றும் ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு மலரமாலைகள் அணிவிக்கப்பட்டு சுனாமியால் காவு கொள்ளப்பட்ட உறவுகளுக்கு அவர்களது உறுகளால் மலர் வணக்கமும் செலுத்தப்பட்டது,

இதில் தேசிய கொடியினை கிராம அலுவலர் அ.விமலேசன் ஏற்றியதை தொடர்ந்து பொது ஈகை சுடர்களை பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியேர் ஏற்றி மலர்மாலை அணிவித்தனர்.

தொடர்ந்து பொது சுடரினை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஏற்றியதை தொடர்ந்து உறவுகள் சநினைவு சுடரேற்றி மலர்தூவி தமது உறவுகளை நினைவு கூர்ந்தனர்.இதில் கொரோணா தடுப்பு சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றி தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதில் நினைவேந்தலில் கலந்து கொண்டவர்களுக்கு வடமராட்சி கிழக்கு லயன் கழகத்தினர் இலவசமாக முக கவசங்களை வழங்கி வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.