ஏ.ஆர்.ரகுமானின் தாயார் உடல் நலக்குறைவால் மரணம்

0 116

தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரகுமானின் தாயார் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்தியாவிலிருந்து இசைக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை தனதாக்கிய ஏ.ஆர்.ரகுமான் இசைத்துறையில் சாதிக்க முழுமுதற்காரணமும் அவரது தாயார் கரீமா பேகம் தான்.

இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கரீமா பேகம் இன்று காலை உயிரிழந்தார்.

தாயார் உயிரிழந்ததை தொடர்ந்து தாயாரின் புகைப்படத்தை ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் அவரது பதிவின்மூலம் சினிமாத்துறையினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரகுமான் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது உலக அளவில் ஜொலித்துக் கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.