சிறுவனின் இடது கண்ணுக்கு பதில் வலது கண்ணில் தவறுதலாக அறுவை சிகிச்சை ; இந்தியாவில் சம்பவம்

0 254

இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிறுவன் ஒருவனுக்கு இடது கண்ணுக்கு பதில் வலது கண்ணில் தவறுதலாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

7 வயது சிறுவனின் இடது கண்ணில் தொடர்ந்து நீர் வந்து கொண்டே இருந்ததால், அவனது பெற்றோர் அவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சிறுவனின் கண்ணை சோதனை செய்த வைத்தியர் அவனது கண்ணுக்குள் மெல்லிய பிளாஸ்டிக் போன்ற பொருள் இருப்பதாகவும், சிறிய அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்றிவிடலாம் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோரின் சம்மதத்துடன் சிறுவனின் கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

ஆனால், சிறுவனின் இடது கண்ணுக்கு பதிலாக தவறுதலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வைத்தியசாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸாரிடம் சிறுவனின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். அந்த முறைப்பாட்டில், தவறுதலாக அறுவை சிகிச்சை செய்த வைத்தியரின் லைசென்ஸை இரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.