படுகொலை செய்யப்பட்ட மேரி பஸ்ரியன் அடிகளாரின் 36 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு இரத்த தான முகாம்.
படுகொலை செய்யப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் நினைவு கூறப்பட்டது.
இன்று புதன் கிழமை காலை 6 மணியளவில் வங்காலை புனித ஆனால் ஆலயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவல் பெர்னாண்டோ அண்டகை தலைமையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதோடு, ஆலய வளாகத்தில் அமைந்துள்ள அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் சிலைக்கு முன் நினைவு நிகழ்வு இடம் பெற்றது.
அதனைத் தொடர்ந்து அருட்பணி மேரி பஸ்ரியன் சமூக முன்னேற்றக் கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் வங்காலை பங்குத்தந்தை, உதவி பங்குத்தந்தை, மற்றும் ஆலய மேய்ப்பு பணி சபையினர், கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினர், பங்கு மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மன்னார் பொது வைத்தியசாலையில் இருந்து வருகை தந்த வைத்தியர்கள், தாதியர்கள், பணியாளர்கள் இணைந்து மிகவும் சிறப்பான முறையிலே இரத்ததான நிகழ்வை நடாத்தி முடித்திருந்தார்கள்.
இரத்த தான நிகழ்வை தொடர்ந்து தேவையுடையவர்களுக்கு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.