குறி வைக்கப்படும் காதலர்கள் – சிக்கிக்கொள்ள வேண்டாம் – பொலிஸார் எச்சரிக்கை…

0 257

இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களை கண்காணிக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணனி குற்றவியல் விசாரணை பிரிவு ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் விபரித்துள்ள அவர்.

விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வதற்கு சுகாதார பிரிவு அதிகாரிகளின் அனுமதியை பெறவேண்டும்.

காதலர் தினத்திற்காக சட்ட விரோத கொண்டாட்டங்கள் ஏற்படகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இதனால் இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களை கண்காணிக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணனி குற்றவியல் விசாரணை பிரிவு ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் நாளை அல்லது நாளை மறுதினம் உங்களது தொலைபேசிகளுக்கு அல்லது சமூக ஊடகங்களுக்கு நீங்கள் காதலர்கள் உங்களுக்கு பரிசளித்துள்ளதாகவும் அதனை விநியோகம் செய்வதற்கான பணத்தை முதலிடுமாறும் குறுஞ்செய்திகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

பெரும்பாலும் இவை மோசடிகளாகவே இருக்க கூடும் எனவும் அவ்வாறான செயற்பாடுகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் எனவும் அஜித் ரோஹண எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.