இரணை தீவில் தமிழர்களின் எதிர்ப்புக்கள் மத்தியில் தோண்டப்பட்ட குழிகள்.
மக்களின் கடும் எதிர்ப்பை மீறியும் இரணை தீவு பகுதியில் கொரோனா தொற்றோடு இறந்தவர்களின் சடலங்களை புதைப்பதற்கான குழிகள் தோண்டப்பட்டுள்ளைமை மக்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
360 க்கு மேற்பட்ட குடும்பங்களை கொண்ட இரணைதீவு பகுதியில் மக்களின் அனுமதியோ பொது அமைப்புக்களின் ஆலோசனைகளோ இன்றி கல்லறைகள் அமைக்கப்பட்டு கொடிகள் நாட்டப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாகவும் மதம் சார்ந்து அல்லாமல் ஒவ்வொரு மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இதனை தாம் எதிர்பதாகவும் இரணை தீவு பங்குதந்தை மடுத்தீன் பத்திநாதர் தெரிவித்துள்ளார்.
எனவே அரசாங்கம் இம் முடிவை மீள் பரிசீலனை செய்து மக்கள் நடமாட்டம் அற்ற தீவுகளை தெரிவு செய்து அவ்வாறன பகுதிகளில் சடலங்களை அடக்கம் செய்ய முனைய வேண்டும்
மாறாக பல போரட்டங்கள் மத்தியில் மீள் குடியேறி வாழ்வாதாரத்தை கொண்டு செல்லும் எம் பகுதி மக்கள் வசிக்கும் பகுதிகளில் இவ்வாறன செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த கோரிக்கையை வெளிப்படுத்துவதற்கு இன்று 9 மணியளவில் இரனைதீவு பொது மக்கள் அனைவரும் இனைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் இரணை தீவு பங்குதந்தை மடுத்தீன் பத்திநாதர் தெரிவித்துள்ளார்.
இதே போன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் கக்கட தீவு பகுதியிலும் குழிகள் தோண்டப்பட்ட நிலையில் நீர் நிரைந்த காரணத்தினால் அப்பகுதி கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.