ஐ.நா தீர்மானத்தினால் மிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப்பொவதில்லை – டிலான் பெரேரா.

0 285

இராணுவத்தினர் இனப்படுகொலையை முன்னெடுத்தாக கூறுவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர்இ

ஐஇநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட 461 தீர்மானத்தை அரசின் தோல்வி என எதிர்த்தரப்பினர் கூறுகின்றனர்.

இந்தத் தீர்மானம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டவில்லை.

மாறாக 30 வருட கால போரை நிறைவுக்குக் கொண்டுவந்த இராணுவத்தினருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டது.

இதனை எதிர்த்தரப்பினர் தெரிந்து கொள்ளவதோடு இதனை தேசிய பிரச்சினையாகக் கருத வேண்டும்.

இறுதிக்கட்டப் போரில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

ஆனால் அவ்வாறான குற்ச்சாட்டுக்கள்; ஏதும் இதுவரையில் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ஜெனிவாவில் இலங்கை விவகாரம் ஒவ்வொரு வருடமும் பேசப்படுகின்றது.

இதனால் சாதாரண தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப்பொவதில்லை.

மேலும் தமிழ் மக்களின் உரிமைகளை இராணுவத்தினர் பறித்தார்கள் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ் இளைஞர்இ யுவதிகளை விடுதலைப்புலிகள் பலவந்தமாகப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டார்கள்.

சிறுவர்கள்கூட பலவந்தமான முறையில் போராளிகள் ஆக்கப்பட்டனர்.

இதனை மனித உரிமை மீறலாக ஏன் சர்வதேசம் கருதவில்லை? எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.

அத்துடன் இலங்கையின் மனித உரிமைகளை விமர்சிக்கும் நாடுகளின் மனித உரிமைகள் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முழு உலகமும் நன்கு அறிந்துள்ளது.

இவ்வாறான நிலையில் இவர்கள் இலங்கைக்கு எதிராகச் செயற்படுகின்றமை குறுகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டவை.

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தால் இலங்கைக்கும்இ அரசுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

இராணுவத்தினரையும்இ நாட்டின் சுயாதீனத் தன்மையையும் எந்தக் காரணிகளைக் கொண்டும் விட்டுக் கொடுக்கமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.