இலங்கைக்கு எதிரான பிரேரணை – கண்காணிப்பபுக்கு தயாரான கனடா..

0 255

இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் கண்காணிப்பு நடவடிக்கைக்கு உதவுவதாக கனடா அறிவித்துள்ளது.

கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளவுது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை உறுதிப்படுத்த சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான ஆதரவை பிரதிபலிக்கும் வகையில் இந்தப் பிரேரணை நிறைவேற்றம் அமைந்துள்ளது.

இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் சபை உறுப்பினர்களுடன் இணைந்து கனடாவும் பணியாற்றியது.

இதன்படி மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டத்தின் மீறல்கள் பற்றிய தகவல்களையும் ஆதாரங்களையும் சேகரிக்கவும், ஒருங்கிணைக்கவும், பகுப்பாய்வு செய்யவும் பாதுகாக்கவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தை கட்டாயப்படுத்துவதன் மூலம் இலங்கையில் பொறுப்புக்கூறலை புதிய தீர்மானம் முன்வைக்கிறது.

எனவே எதிர்கால பொறுப்புக்கூறல் செயன்முறைகளுக்கு இந்த ஆணை முக்கியமானதாக இருக்கும்.

இந்நிலையில் மனித உரிமைகள் தொடர்பான கடமைகளை நிலைநிறுத்தவும், தண்டனையை முடிவுக்கு கொண்டுவரவும், ஒரு விரிவான பொறுப்புக்கூறல் செயல்முறையை மேற்கொள்ளவும் கனடா இலங்கையை தொடர்ந்து வலியுறுத்தும்.

இந்தத் தீர்மானம் இலங்கைக்கு பாதுகாப்பான, அமைதியான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு படியாகும் என சுட்டிக்காட்டிய அவர், இந்த இலக்கை நோக்கிச் செல்லும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க கனடா தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.