மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மொழி மூல அறிக்கை தொடர்பான விவாதம் இன்று
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் முன்வைத்த வாய்மொழி மூல அறிக்கை தொடர்பில் உறுப்பு நாடுகளின் விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.
தற்போது, பிரதமருடன் இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தொலைக்காணொளி வழியாக விவாதத்தில் இணைந்துகொள்ளவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது. அதன்போது, உறுப்பு நாடுகள் தொடர்பான தமது அறிக்கையை முன்வைத்த மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் இலங்கை தொடர்பில் கருத்து வெளியிட்டார்.
அரசாங்கத்தினால் அண்மையில் நிறைவேற்றப்பட்ட அவசரகால விதிகள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடடத்தக்கது.