இதுவரையில் அடக்கம் செய்யப்பட்ட கொவிட் சடலங்களின் எண்ணிக்கை
மட்டக்களப்பு, ஓட்டமாவடி பகுதியில் கொவிட் சடலங்களை அடக்கம் செய்வதற்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் இதுவரையில் 2,800 மேற்பட்டவர்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி இதனை தெரிவித்துள்ளார்.
கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் மேலும் சில பகுதிகள் கொவிட் சடலங்களை அடக்கம் செய்வதற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றிற்கு இதுவரையில் சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பிரிவின் அனுமதி கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.