6 அணிகள் பங்குபற்றும் அங்குரார்ப்பண லங்கா ரி 10 சுப்பர் லீக் நாளை ஆரம்பம்

0 351

ஆறு தொழில்முறை அணிகள் பங்குபற்றும் அங்குரார்ப்பண லங்கா ரி10 சுப்ப லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டி கண்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் நாளை புதன்கிழமை (11) ஆரம்பமாகவுள்ளது.

அங்குரார்ப்பண லங்கா ரி10 சுப்ப லீக் கிரிக்கெட் போட்டியில் ஜெவ்னா டைட்டன்ஸ் (Jaffna Titans), ஹம்பாந்தொட்ட பங்ளா டைகர்ஸ் (Hambantota Bangla Tigers), நுவரஎலிய கிங்ஸ் (Nuwara Eliya Kings) ஆகிய அணிகள் ஏ குழுவிலும் கலம்போ ஜகுவார்ஸ் (Colombo Jaguars), கண்டி போல்ட்ஸ் (Kandy Bolts), கோல் மாவல்ஸ் (Galle Marvels) ஆகிய அணிகள் பி குழுவிலும் இடம்பெறுகின்றன.

லங்கா கிரிக்கெட் (இலங்கை கிரிக்கெட் நிறுவனம்) ஏற்பாடு செய்துள்ள லங்கா ரி20 சுப்பர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கு ரி10 குளோபல் ஸ்போர்ட்ஸ், தி ஐபிஜ குறூப் என்பன அனுசரணை வழங்குகின்றன.

நாளைக் பிற்பகல் 2.45 மணிக்கு நடைபெறவுள்ள கண்கவர் ஆரம்ப விழாவைத் தொடரந்து ஜெவ்னா டைட்டன்ஸ் அணிக்கும் ஹம்பாந்தொட்ட பங்ளா டைகர்ஸ் அணிக்கும் இடையிலான முதலாவது போட்டி பிற்பகல் 4.00 மணிக்கு ஆரம்பமாகும்.

அதனைத் தொடர்ந்து மாலை 6.15 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இரண்டாவது போட்டியில் நுவர எலிய கிங்ஸ் அணியும் கலம்போ ஜகுவார்ஸ் அணியும் மோதவுள்ளன.

நாளை இரவு நடைபெறவுள்ள 3ஆவது போட்டியில் கண்டி பொல்ட்ஸ் அணியை கோல் மார்வல்ஸ் அணி எதிர்த்தாடும்.

லங்கா ரி10 சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் யாவும் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

லீக் சுற்று நாளை 11ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் 17ஆம் திகதிவரை ஒவ்வொரு நாளும் 3 போட்டிகள் வீதம் 21 போட்டிகள் நடைபெறவுள்ளது.

முதலாவது தகுதிகாண் போட்டி, நீக்கல் போட்டி, 2ஆவது தகுதிகாண் போட்டி ஆகிய மூன்று போட்டிகளும் 18ஆம் திகதியன்று நடைபெறும்.

ஒவ்வொரு நாளும் மூன்று போட்டிகள் முறையே பிற்பகல் 4.00 மணிக்கும் மாலை 6.15 மணிக்கும் இரவு 8.30 மணிக்கும் ஆரம்பமாகும்.

இறுதிப் போட்டி 19ஆம் திகதி பிற்பகல் 5.30 மணிக்கு ஆரம்பமாகும்.

இறுதிப் போட்டிக்குப் பின்னர் பரிசளிப்பு வைபவமும் அதனைத் தொடர்ந்து முடிவு விழாவும் நடைபெறும்.

Leave A Reply

Your email address will not be published.