ஜார்ஜியாவில் லெஜண்ட் சரவணன்

0 252

தமிழகத்தின் முன்னணி தொழிலதிபரும், நடிகருமான தி லெஜண்ட் சரவணன் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் துரை. செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத திரைப்படத்தில் ‘தி லெஜண்ட்’ சரவணன், பாயல் ராஜ்புத், ஆண்ட்ரியா, ஷாம் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை தி லெஜண்ட் சரவணன் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜார்ஜியா நாட்டில் நடைபெற்று வருகிறது என்றும், அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் பட மாளிகையில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே நடிகர் தி லெஜண்ட் சரவணன் நடிப்பில வெளியான ‘தி லெஜண்ட்’ எனும் திரைப்படம் ரசிகர்களிடம் ஓரளவிற்கு வரவேற்பினைப் பெற்றது என்பதும், அந்த திரைப்படம் வணிகரீதியான வெற்றியைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.