அமெரிக்கா வழங்கிய எம்கே84 குண்டுகள் இஸ்ரேலை சென்றடைந்தன- காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக நெட்டன்யாகு தெரிவிப்பு

0 452

அமெரிக்கா வழங்கியுள்ள வெடிகுண்டுகள் கிடைத்துள்ள நிலையில் காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் டிரம்பின் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.
காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் ,அமெரிக்கா காசாவை அபிவிருத்தி செய்யும் டொனால்ட் டிரம்பின்திட்டத்தினை பாலஸ்தீனியர்களும் அமெரிக்காவின் சகாக்களும் மனித உரிமை அமைப்புகளும் கண்டித்துள்ள போதிலும் வேறு விதமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு இது உகந்த திட்டம் என இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவது இனச்சுத்திகரிப்பிற்கு ஒப்பானது என தெரிவிக்கப்படுவதை இஸ்ரேலிய பிரதமர் நிராகரித்துள்ளார்.

காசா குறித்து நானும் டிரம்பும் பொதுவான மூலோபாயமொன்றை கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ள பெஞ்சமின் நெட்டன்யாகு,அமெரிக்க ஜனாதிபதியின் திட்டமே சரியானது என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நீங்கள் விரும்பிய எதனையும் செய்யுங்கள் என பிபியிடம் ( பெஞ்சமின் நெட்டன்யாகுவிடம்) தெரிவித்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

என்னுடன் கலந்தாலோசித்துவிட்டு இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்கா வழங்கிய எம்கே84 குண்டுகள் இஸ்ரேலை சென்றடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோபைடன் இந்த வகை குண்டுகளை இஸ்ரேலிற்கு வழங்குவதற்கு தடை விதித்திருந்தார்.

வலிமை மூலம்சமாதானம் என கருதுவதால் இந்த குண்டுகளை இஸ்ரேலிற்கு வழங்குவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

எம்கே84-907 கிலோ குண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.