வடக்கில் களமிறங்கும் இந்தியா மற்றும் சீனா! நடக்கப்போவது என்ன?

0 219

வடக்கில் அபிவிருத்திகளை மேற்கொள்ள சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடங்களை வழங்கியுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதனால் வட பகுதி மக்கள் அதிக நன்மைகளை அடைவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று (17) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறிமாவோ பண்டார நாயக்க காலப்பகுதியில் இருந்து இலங்கையானது சீனாவுடனும், இந்தியாவுடனும் நெருக்கமான தொடர்புகளை பேணுகின்றது.

அவருடைய காலப்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்ட போதும் நடுநிலையாக செயற்பட்டு இருந்தது.

தற்போதும் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையில் முரண்பாட்டு நிலை காணப்படுகின்றது. அது தொடர்பில் நாம் ஜனாதிபதியுடன் பேசியே முடிவுகளை எடுத்து வருகின்றோம்.

நாம் எந்த நாடுகளுக்கும் எமது பகுதிகளை விற்கவில்லை. எந்த நாட்டுக்கும் சார்பாக செயற்படவும் இல்லை. இயற்கையான பகுதிகளில் அபிவிருத்தி செய்வதற்கு நாம் சில பகுதிகளை வழங்குகின்றோம்.

இதனால் எமது மக்களுக்கும் நன்மைகள் ஏற்படும். வடக்கில் இந்தியாவும், சீனாவும் அபிவிருத்திகளை மேற்கொள்ள இடங்களை வழங்கியுள்ளோம்.

இதனால் வட பகுதி மக்களுக்கு அதிக நன்மைகள் ஏற்படும் எனத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.