2024 பொதுத் தேர்தல்: வாக்கு எண்ணும் செயல்முறை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ஆம் திகதி மாலை 4.15 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மீள் பரிசோதிக்கப்பட்டு அங்கீகாரம் பெற்ற பின்னரே வாக்களிப்பு பகுதிகள் மற்றும் மாவட்ட மட்ட முடிவுகள் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என்றும் ரத்நாயக்க தெரிவித்தார்.
எனவே, உத்தியோகபூர்வமற்ற தேர்தல் முடிவுகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அவர் அனைவரையும் கேட்டுக் கொண்டார்.
“அஞ்சல் வாக்குகளை எண்ணும் பணி மாலை 4.15 மணிக்கு ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நவம்பர் 14 ஆம் திகதி உத்தியோகபூர்வ நடைமுறைகள் முடிந்ததைத் தொடர்ந்து, அந்தந்த வாக்குச் சாவடிகளில் இருந்து சுமார் 7.15 மணியளவில் வாக்குப் பெட்டிகள் பெறப்பட்ட பிறகு வழக்கமான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். அதன் பிறகு, முடிவுகளை ஊடகங்களுக்கு வெளியிட ஏற்பாடு செய்யப்படும். அதுவரை, அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து கூறிய அவர், மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படும் வாக்கு எண்ணும் செயல்முறை பற்றிய விவரங்களையும் தெரிவித்துள்ளார்.