மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறும் முதல் அரசாங்கம் : சட்டத்தரணிகள் சம்மேளனம் பெருமிதம்

0 462

இதுவரையிலான தேர்தல் முடிவுகளில் இருந்து, தேசிய மக்கள் சக்தி, நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறும் அல்லது அதனை விட சிறிய எண்ணிக்கை குறைவான ஆசனங்களை பெறும் என்று எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் இந்த எதிர்பார்ப்பைவெளியிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி, மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றால், விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் ஒரு கட்சி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவது இதுவே முதல் முறையாக இருக்கும்.

2010 இல் மக்கள் கூட்டணியும் 2020 இல் பொதுஜன பெரமுனவும், மூன்றில் இரண்டு பங்குக்கு குறைவாக ஆசனங்களை பெற்றதால்,மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற சில எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டியிருந்தது.1994 ஆம் ஆண்டு பிரதமர் சந்திரிக்கா குமாரதுங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் இந்த வெற்றிக்கான ஒரே சமாந்தரமாகும்.

வடக்கிலும் கிழக்கிலும் தேசிய மக்கள் சக்தி, கணிசமான வெற்றிகளைப் பெற்றுள்ளது, இதன் மூலம்  இலங்கையில் உள்ள பலதரப்பட்ட சமூகங்களை ஒன்றிணைக்கக்கூடிய தலைவராக தற்போதைய ஜனாதிபதி செயற்படமுடியும்.

அத்துடன், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் வாக்குறுதியை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விரைவாக நிறைவேற்றுவதற்கு இந்த தேர்தல் முடிவு வழி வகுக்கும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நாட்டின் திசையில், குறிப்பாக அரசியல் கலாசாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.என்பதற்கு இந்த மாபெரும் வெற்றி ஒரு சான்றாகும்.எவ்வாறாயினும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், வரும் ஆபத்துக்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.